தற்போதைய செய்திகள்

அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றிகாட்டுவோம்-முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் சபதம்

ஈரோடு

கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றி காட்டுவோம் என்று முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் ஊத்துக்குளி தெற்கு ஒன்றிய கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் ஊத்துக்குளியில் நடைபெற்றது. கூட்டத்துக்குஊத்துக்குளி ஒன்றிய கழக செயலாளர் கே.கே.சக்திவேல் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

அம்மாவின் வழியில் ஆட்சி நடத்திய எடப்பாடியார் அவிநாசி-அத்திக்கடவு திட்டம், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் என மக்கள் குடிநீர் தாகம் திட்டங்களை கொண்டு வந்தார்.

பெருந்துறை தொகுதியில் பல்வேறு தடுப்பணைகள், குடிநீர் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. தி.மு.க ஆட்சியில் ஓராண்டு ஆகியும் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மின்வெட்டால் மக்கள் மிகுந்த துயரமடைந்துள்ளனர். சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

இந்த அரசில் தி.மு.க.வின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் உள்ளது. பொதுமக்கள் சொத்து வரிவிதிப்பால் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். கழகத்தினர் தி.மு.க. அரசின் வேதனைகளை வீடு வீடாக எடுத்து செல்ல வேண்டும். க

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு பின்னாலும் கழகம் நூறாண்டுகள் ஆட்சி செய்யும் என கூறினார். அம்மாவின் லட்சியங்களை நிறைவேற்ற நாம் பாடுபட வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்