சிறப்பு செய்திகள்

அம்மா அரசு தொடர்ந்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் – முதலமைச்சர் திட்டவட்டம்

ஈரோடு

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில ்தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளமென திரண்டு வந்து அவரது பேச்சை கேட்டனர். திய சக்தி தி.மு.க.வை புறக்கணித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு தாரூர் என்று மக்களிடம் முதலமைச்சர் ஆதரவு திரட்டினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ஈரோடு மாவட்டம், ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ஈரோடு மாவட்டம், ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது

குடியிருக்க வீடு, சுகாதாரம், கல்வி, சாலை வசதி, தடையில்லா மின்சார வசதிகள் என மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நல்ல முறையில் எங்கள் அரசு செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சியில் ஒன்றும் நடக்கவில்லையென்று சொல்கிறார். 2011-ஆம் ஆண்டிலிருந்து 2020-ஆம் ஆண்டு வரை ஈரோடு மாநகரத்தில் எண்ணற்ற பணிகளை செய்து சாதனை படைத்துள்ளோம்.

திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்? ஈரோடு வளர்ச்சிக்காக எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. குடிநீர் பிரச்சனையை தீர்க்கவில்லை. ஈரோடு மாநகர மக்களுக்காக புதிய, புதிய திட்டங்களை உருவாக்கி மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருகின்ற அரசு அம்மாவின் அரசு என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், ஸ்டாலின் மட்டும், கழக ஆட்சியில் ஏதுமே நடைபெறவில்லை, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு எதுவும் செய்யவில்லை என்கிறார். ஈரோடு மாநகர மக்களுக்கு நான் செய்துள்ளதை ஸ்டாலின் ஈரோடு வந்து கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

ஈரோடு பகுதிகளில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. அதன் மூலம் வெளியேறுகின்ற கழிவு நீரை சுத்தப்படுத்துவதற்காக சுமார் 26 ஏக்கர் நிலப்பரப்பளவில் மத்திய அரசின் நிதி உதவியுடன் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். நடந்தாய் வாழி காவேரி திட்டத்தின் கீழ் மேட்டூரில் இருந்து கடலில் கலக்கும் வரை எங்கெல்லாம் காவேரியில் அசுத்த நீர் கலக்கின்றதோ அங்கெல்லாம் சுத்திகரிப்பு செய்து நீர் விடப்படும். பாரத பிரதமரிடம் திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரியிருந்தோம். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது குடியரசு தலைவர் உரையில் நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஒரு அராஜகக் கட்சி. அந்த அராஜகக் கட்சி மீண்டும் தலையெடுத்து விடக்கூடாது. நாட்டில் கட்டப் பஞ்சாயத்து மீண்டும் தலைதூக்கி விடும். கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்க வேண்டுமென்றால் மீண்டும் அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டும். ஓட்டலில் ஓசி பிரியாணி கேட்டு திமுகவினர் சண்டை போடுகிறார்கள். அதற்கு ஸ்டாலின் அவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்.

கட்டப் பஞ்சாயத்து செய்யும் கட்சி நாட்டிற்குத் தேவையா? ஜாதி, மதச் சண்டைகள் இன்றி, அரசியல் அராஜகமின்றி தமிழகம் இப்போது அமைதியாக இருக்கிறது. அப்படி அமைதியாக இருக்கையில், இப்படிப்பட்ட கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களை நிம்மதியாக, சுதந்திரமாக வாழ விடமாட்டார்கள்.

ஒவ்வொரு கூட்டத்திற்கும் நோட்டைத் தூக்கி வந்து கடைகள்தோறும் வசூல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், உங்கள் வீட்டில் ஒருவராக, மக்களில் ஒருவராக இருந்து நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். எனவே, அம்மா ஆட்சி தொடர்ந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். எனவே, அம்மாஆட்சி தொடர வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.