திருவண்ணாமலை

அரசின் சாதனையை விளக்கி கூறி கழகத்தின் வெற்றிக்கு துணை நிற்பீர்

மகளிர் பூத் கமிட்டியினருக்கு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்

திருவண்ணாமலை

வீடு வீடாக அரசின் சாதனையை விளக்கி கூறி கழகத்தின் வெற்றிக்கு துணை நிற்க வேண்டும் என்று மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ.வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் செய்யாறு வடக்கு ஒன்றிய மகளிரணி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:-

முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சிறப்பாக பணி புரிந்தால் தான் கழக ஆட்சி தொடர்ந்து நடைபெறும்.

உங்கள் தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று வரலாம் கழக அரசின் சாதனைகளை உங்கள் தெருவில் உள்ள பெண்களுக்கு எடுத்துக் கூறுங்கள் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டி வழங்கும் திட்டம்,

கர்ப்பிணிகளுக்கு பேறுகால உதவியாக ரூபாய் 18 ஆயிரம், படித்த பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூபாய் 50,000 தாலிக்கு ஒரு பவுன் தங்கநகை மகளிர் குழுக்கள் மூலம் சுய தொழில் செய்ய மானிய விலையில் கடன் உதவி, ரூபாய் 2500 மற்றும் பொங்கல் பரிசு என பெண்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறுங்கள். அப்போதுதான் கழக அரசின் திட்டங்கள் என்னென்ன வந்தது என்பது அனைவருக்கும் தெரியவரும் மேலும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்கடனை முதல்வர் தள்ளுபடி செய்துள்ளார். இதையும் எடுத்துக் கூறுங்கள்.

இவ்வாறு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் டி.கே.பி.மணி, முன்னாள் எம்.எல்.ஏ. நளினி மனோகரன், மாவட்ட இணைசெயலாளர் எம்.விமலா மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அருகாவூர் ரங்கநாதன், சி.துரை, பெரணமல்லூர் செல்வராஜ், மாவட்ட கழக நிர்வாகிகள் டி.பி.துரை, பாஸ்கர்ரெட்டியார், வந்தவாசி விஜய், ரவிச்சந்திரன், அருணகிரி, ரமேஷ், கன்னியப்பன், சுரேஷ்நாராயணன், பிற அணி நிர்வாகிகள் செபாஸ்டின் துரை, ஏ.துரை, சுதாகர், பிரகாஷ், மகாதேவன், வெங்கடேஷ், ராஜேஷ்குமார், பச்சையப்பன், ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.