தமிழகம்

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை: அரசிதழில் அவசர சட்டம் வெளியீடு

சென்னை

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் இளைஞர்கள் ஈடுபட்டு தங்களது பணத்தை இழந்தபின் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகள் தடைசெய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் அவரச சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

அவசர சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10 ஆயிரம் அபராதமும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். தடையை மீறி விளையாடினால் ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும். மேலும் பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.. தமிழக அரசின் அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது…