திருவண்ணாமலை

ஆரணி அருகே ரூ. 7 லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்கு-முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை
ஆரணி அடுத்த கண்ணமங்கலத்தில் உள்ள ரூ. 7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை மக்கள் பயன்பாட்டிற்காக முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பஜாரில் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாசின் 2019-2020-ம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சம் மதிப்பிலான உயர்மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளரும், மேற்கு ஆரணி ஒன்றியக்குழு துணைத்தலைவருமான அ.வேலாயுதம் தலைமை தாங்கினார். மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சரும், ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு உயர் கோபுர மின் விளக்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் வக்கீல் க.சங்கர், ப.திருமால், ஜி.வி.கஜேந்திரன், நகர செயலாளர் எ.அசோக்குமார், மாவட்ட ஆவின் தலைவர் பாரி பி.பாபு, கண்ணமங்கலம் நகர செயலாளர் பாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சரவணன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சரவணன், நகர மாணவரணி செயலாளர் கே.குமரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.