தமிழகம்

இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

சென்னை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சகோதரர் தா.பாண்டியன் காலமான செய்தியறிந்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தா.பாண்டியன் இன்று (நேற்று) காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், அவரின் இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.