உடுமலை தொகுதி சூளேஸ்வரன்பட்டியில் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு

திருப்பூர்
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி (மே) தெற்கு சூளேஸ்வரன் பட்டி பேரூராட்சி பகுதிக்கு நேற்று முன்தினம வருகை தந்த எடப்பாடியாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கழக தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டனர்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் இருந்து கோட்டூர் வழியாக நிகழ்ச்சிக்கு சென்ற போது அவருக்கு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் கழகம் சார்பில் உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி (மே) தெற்கு ஒன்றியம் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் பொள்ளாச்சி (மே)தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மு.இளஞ்செழியன், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி கழக செயலாளர் பி.நரிமுருகன் ஆகியோர் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூங்கொத்து வழங்கியும், ஆளுயர மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆவின் சங்க தலைவர் கே.மனோகரன், மாவட்ட கழக இணை செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், நகர கழக செயலாளர் ஏ.ஹக்கீம், ஒன்றிய கழக செயலாளர்கள் சின்ன பாலு, சோமசுந்தரம், ஆவல்பட்டி நடராஜ், சி.அன்பர்ராஜன், சி.எம்.பிரனேஷ், பெரிய கோட்டை முருகேசன், பேரூராட்சி கழக செயலாளர் எஸ்.கே.சித்ரா, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதயகுமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் எஸ்.எம்.நாகராஜ் பாசறை செயலாளர் மஜீத் மற்றும் மாவட்ட சார்பணி நிர்வாகிகள், நகர ஒன்றிய, பேரூராட்சி கழக, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பொறுப்பாளர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி கழக செயலாளர் எம்.சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.