சிறப்பு செய்திகள்

உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் – முதலமைச்சர் பெருமிதம்

சென்னை

உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய அளவில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகளையும், மூன்றில் ஒரு பங்கு சிறந்த கலை அறிவியல் கல்லூரிகளையும் கொண்டு, உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக நமது அம்மாவின் அரசு காலத்தில்,நம் தமிழ்நாடு திகழ்வதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.