தற்போதைய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் கழகத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்-முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள்.

புதுக்கோட்டை

கழக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு உள்ளாட்சி தேர்தலில் கழகத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆவூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றி 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளரான தன்னை வெற்றிபெற செய்ததற்கு நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்தார். மேலும் இனி வருகின்ற காலத்தில் கழக நிர்வாகிகள், ஆற்றல் மிகுந்த எதிர்கட்சியினராக சிறப்பாக செயல்பட்டு மக்களின் குறைகளை தீர்க்க உறுதியாக நின்று குரல் கொடுக்க வேண்டும்.

மிக விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதையொட்டி அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையாக செயல்பட்டு கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய ஊராட்சி நகர கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


அதனைத்தொடர்ந்து விராலிமலை கிழக்கு ஒன்றியத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும் வழியில்
நீர்பழனி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, கழக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய படுக்கைகள் கொண்ட நோயாளிகளுக்கான சிகிச்சை அறையை முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அப்போது சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் அவர் நலம் விசாரித்தார்.