தற்போதைய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் கழகம் வெற்றிபெற ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்

நிர்வாகிகளுக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வேண்டுகோள்

விழுப்புரம்

ஒரு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி சிறப்பாக இருக்கும். உள்ளாட்சி தேர்தலில் கழகம் வெற்றிபெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் மரக்காணம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன், மரக்காணம் ஒன்றிய செயலாளர்கள் ரவிவர்மன், நடராஜன், நகர செயலாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

திமுகவினர் மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று பெருவாரியான பொதுமக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை. அ.தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஒரு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி சிறப்பாக இருக்கும்.

கழகம் பொன்விழா காண உள்ளது. இதில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமை அ.தி.மு.க.வை சாரும்.
கழக ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். உழைப்பவர்களுக்கு பதவி தரும் இயக்கம் அ.தி.மு.க தான். மேலும் மூத்த நிர்வாகிகள் இளைஞர்கள், மகளிர் நிர்வாகிகள் கழகத்தை வலுப்படுத்த வேண்டும். வருகிற உள்ளாட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெற நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
இக்கூட்டத,்தில் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாவட்ட செயலாளர் எண்டியூர் விநாயகம், முன்னாள் துணைத்தலைவர் பாண்டுரங்கன், அவைத்தலைவர் தீபம்குமார், ஒன்றிய பொருளாளர் ராம்குமார், பேரவை ஒன்றிய செயலாளர்கள் கந்தன், ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் மாணிக்கம், சித்தாமூர் முருகன், மாணவரணி செயலாளர் குமரவேல், விவசாய அணி செயலாளர் ஆதிபாகவன், இலக்கிய அணி செயலாளர் பிரேம்குமார், பாசறை செயலாளர் ராஜா, ஒன்றிய இணைச் செயலாளர் கோமதி யுவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.