தற்போதைய செய்திகள்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு-கழக கொறடா எஸ்பி.வேலுமணி எம்.எல்.ஏ வழங்கினார்

கோவை,
தொண்டாமுத்தூர் தொகுதி தேவராயபுரம் ஊராட்சி பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீர், உணவு ஆகியவற்றை கழக கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி.வேலுமணி எம்.எல்.ஏ வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ, அறிவுறுத்தலின் பேரில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கழகம் சார்பில் அரிசி, காய்கறிகள், மதிய உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

முன்னாள் அமைச்சரும், கழக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ தொண்டாமுத்தூர் தொகுதி வேடப்பட்டி, பேரூர், தென்கரை, பூலுவபட்டி, ஆலாந்துறை பேரூராட்சிகள், இக்கரைபோளுவாம் பட்டி, வெள்ளிமலைபட்டினம், நரசிபுரம், மத்வராயபுரம் ஊராட்சி பகுதிகளுக்கு நேரடியாக சென்று கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் தொடர்ந்து முகக் கவசம், நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும் கபசுர குடிநீர், சத்தான உணவு ஆகியவற்றை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தேவராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட மெட்டு வீதி, பரமேஸ்வரன்பாளையம், தேவராயபுரம் ஹை ஸ்கூல், புள்ளாகவுண்டன் புதூர், வெள்ளருக்கம்பாளையம் பகுதிகளில் கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ,.
ஆதிதிராவிட மக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் கபசுரக் குடிநீர், முகக் கவசம், மதிய உணவு ஆகியவற்றை வழங்கினார். மேலும் கொண்டையம்பாளையம் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் முகக், கவசம், கபசுர குடிநீர், உணவு ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள் என்.கே.செல்வதுரை, ஜி.கே.விஜயகுமார், தொண்டாமுத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் மதுமதி விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் டிபி.வேலுசாமி, ராஜா (எ) ராமமூர்த்தி, சக்திவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி.சி.பிரதீப், ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன்ராஜ், ஒன்றிய கழக நிர்வாகிகள் ராசு (எ) ஆறுச்சாமி, ஜெயபால், ஊராட்சி தலைவர் தனமணி மூர்த்தி, பாசறை மாவட்ட தலைவர் நிஷ்கலன்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.