தற்போதைய செய்திகள்

ஏகாம்பரநாத நல்லூர் கூட் ரோட்டில் நகரும் ரேசன் கடை சேவை துவக்கம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனுக்கு கிராம மக்கள் நன்றி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பாளைய ஏகாம்பர நல்லூர் கூட்டுரோடு பகுதிகளில் அம்மா நகரும் நியாய விலைக்கடை சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனுக்கு கிராம மக்கள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்டுரோடு, கொட்டாமேடு ஆகிய பகுதிகளில் 180 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். இந்நிலையில் பாளைய ஏகாம்பர நல்லூர் கூட்டுரோடில் அம்மா நகரும் நியாய விலைக்கடை சேவையை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனிடம் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூட்டுறவுத்துறை அதிகாரிகளை அழைத்து உடனடியாக பாளைய ஏகாம்பர நல்லூர் கூட்டுரோடில் அம்மா நகரும் நியாய விலைக்கடை சேவை தொடங்க உத்தரவிட்டார். அதன்படி அம்மா நகரும் நியாயவிலைக்கடை சேவை துவங்கப்பட்டது. இதற்காக அப்பகுதியினர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனுக்கு நன்றி தெரிவித்தனர்.