தற்போதைய செய்திகள்

ஏழை பெண்கள் வாழ்வில் ஒளியேற்றியவர் அம்மா-அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி புகழாரம்

தென்காசி

திருமண நிதியுதவி – தாலிக்கு தங்கம் வழங்கி ஏழை பெண்கள் வாழ்வில் ஒளியேற்றியவர் புரட்சித்தலைவி அம்மா என்று

அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி புகழாரம் சூட்டினார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் சமூகநலத்துறை மூலம் ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கீ.சு.சமீரன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி கலந்து கொண்டு 527 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி திருமண நிதியுதவியுடன், ரூ.2.03 கோடி மதிப்பிலான 4.2 கிலோ கிராம் தங்கத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசியதாவது:-

அம்மா அவர்கள் பெண்கள் வளர்ச்சிக்காக. பெண்கள் கல்வி கற்று மேன்மை பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பெண்கள் கல்வி பாதியில் தடை படுவதை தடுத்து நிறுத்த விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

குறைந்தபட்சம் பன்னிரண்டு மற்றும் பட்ட படிப்பு முடித்த பெண்கள் திருமண நேரத்தில் அவர்களுடைய பெற்றோர் பாரத்தை குறைத்திடும் வகையில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் திட்டத்தை கொண்டு வந்து பல ஏழை பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றினார்.

அதனால் பல பெண்கள் பலனடைந்துள்ளனர். அதைவிட அவர்களின் பெற்றோரின் கடன் சுமையை குறைத்தது அம்மா அறிவித்த இந்த திட்டம் தான். அதனை எள் முனை அளவுக்கு குறையாத படி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பாக செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

கழக அரசில் பெண்கள் பாதுகாப்புக்காக ஆண்ட்ராய்டு மொபைல் அப்ளிகேஷனால் தங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை காவல்துறையினர் மூலமாக சரிசெய்ய முடியும் என்ற நிலைக்கு இன்று வந்துள்ளது.

உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பெண்களுக்கான எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்போடு செயல்பட்டு வருபவர், ஒரு நாளைக்கு 20 மணி நேரம் மக்களுக்காக உழைக்கும் நம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.

இவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசினார்.