மற்றவை

ஓசூர், அதியமான் கோட்டை சாலையை சீரமைக்க வேண்டும்

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கோரிக்கை

சென்னை
ஓசூர், அதியமான் கோட்டை சாலையை சீரமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்து பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

மானூர், ஓசூர் அதியமான்கோட்டை சாலையில் கிலோமீட்டர் 56 முதல் 103 வரை தருமபுரி மாவட்டத்தை சார்ந்தது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக நான்கு வழி சாலை போடப்பட்டு வருகிறது.

அந்த நான்கு வழி சாலையில் தோராயமாக 20லிருந்து 25 கிலோ மீட்டர் வரை தான் நகாய் மூலமாக போடப்படுகிறது. மீதம் இருக்கின்ற சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது.

அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு மிகவும் பாதிப்பு ஏற்பட்டு இன்றைக்கு அதிகமான வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே மீதம் இருக்கக்கூடிய சாலைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக இருக்கக்கூடிய சாலைகளை சீர் செய்வார்களா அல்லது அரசு மூலம் அந்த சாலைகள் சீர் செய்யப்படுமா, அரசு மூலம் விரைவாக அந்த சாலையை சீர்செய்ய வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ பேசினார்.