தற்போதைய செய்திகள்

கடலூர் மத்திய மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலையில் 500 பேர் கழகத்தில் இணைந்தனர்

கடலூர்

கடலூர் மத்திய மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

கடலூர் மத்திய மாவட்ட கழக அலுவலகத்தில் மாற்றுகட்சியினர் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் நகர கழக செயலாளர் ஆர்.குமரன் தலைமை தாங்கினார். மாநில மீனவரணி இணை செயலாளர் கே.என்.தங்கமணி முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த 500 பேர் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் பா.பிரதீப் தலைமையில் மத்திய மாவட்ட கழக செயலாளரும் தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்று அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

தொண்டர்கள் பலமே கழகத்தின் பலம். கட்சி தொடங்கி 50 ஆண்டுகளில் 31 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருக்கிறோம் என்றால் அதற்கு தொ ண்டர்களின் பலம் மட்டுமே காரணமாகும். கழகத்தில் மட்டும்தான் யாரும் எந்த பதவிக்கும் ஆசைப்படலாம்.

இந்த கழகத்தில் உள்ளவர்கள் மட்டுமே யார் வேண்டுமானாலும் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் ஆகலாம். ஏன் முதலமைச்சர் கூட ஆகலாம். அதனால்தான் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் சாரை சாரையாக வந்து கழகத்தில் இணைகின்றார்கள். கழகத்தில் இணையும் புதிய இளைஞர்களை மூத்த நிர்வாகிகள் வழிநடத்துவார்கள். அவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும்.

நமது ஒரே குறிக்கோள் இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெற வைக்க வேண்டும். மீண்டும் அம்மா ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்பது மட்டுமே. பத்து ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளோம்.

இதற்கு காரணம் அம்மா மக்களுக்கு தந்த நல்லாட்சி. மக்களுக்கு தந்த நலத்திட்டங்கள். அந்த ஆட்சியின் தொடர்ச்சியாக தற்போது எடப்பாடியார் தலைமையில் மக்களுக்கு சிறப்பான ஆட்சியையும் சிறப்பான திட்டங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இளைஞர்களின் நலன்காக்கும் அரசாக இந்த அரசு உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் சிறந்த உடல்நலத்துடன் இருக்கவேண்டும் என்பதற்காக எடப்பாடியார் அவர்கள் கிராமம் தோறும் விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் அமைத்து உள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா டேட்டா ஆகியவற்றை வழங்கி உள்ளார். இன்று கழகத்தில் இணைந்த அனைவரும் மீண்டும் கழக ஆட்சி அமைய பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராம.பழனிசாமி மாவட்ட துணைசெயலாளர் தெய்வ.பக்கிரி, நகர துணைசெயலாளர் வ.கந்தன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் கெமிக்கல் ஆர்.மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,