அரியலூர்

கழகத்தின் வெற்றிக்கு அயராது பாடுபடுவீர்- அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வேண்டுகோள்

அரியலூர்

கழகத்தின் வெற்றிக்கு தகவல் தொழில் நுட்ப பிரிவினர் அயராது பாடுபட வேண்டும் என்று அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அரியலூர்-பெரம்பலூர் பைபாஸ் ரோட்டிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமிநாதன் அனைவரையும் வரவேற்றார். திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி செயலாளர் வினுபாலன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பேசியதாவது:-

கடந்த மாதம் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு புதிதாக ஒன்றிய நகர கிளை அளவில் நியமிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் அனைவரும் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்க தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும்.

மேலும் இன்றைய தினத்தில் இருந்தே கழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை ஒன்றிய, நகர கிராமப்பகுதிகளில் சமூக வலைதளங்கள் மூலம் சென்று அடையும் வகையில் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் செயல்பாடுகள் அடித்தளமாகவும் துடிப்புடன் இருக்கவேண்டும்.

இவ்வாறு அரசு தலைமை கொறடா பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாணவரணி செயலாளர் ஒ.பி.சங்கர், தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், மாவட்ட சிறுபான்மையினர் நல அணி செயலாளர் அக்பர் ஷெரிப், ஒன்றிய செயலாளர்கள் செல்வராசு, பொய்யூர் பாலசுப்பிரமணியம், குமரவேல், வடிவழகன், நகர செயலாளர் ஏ.பி.செந்தில், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ரிஸ்வான் நன்றி கூறினார்.