திருவண்ணாமலை

கழகத்தின் வெற்றிக்கு ஒன்றுபட்டு உழைப்போம்

மண்டல தேர்தல் பொறுப்பாளர் ப.மோகன் வேண்டுகோள்

திருவண்ணாமலை


கழகத்தின் வெற்றிக்கு அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று மண்டல தேர்தல் பொறுப்பாளர் ப.மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் திருவண்ணாமலை நகரில் உள்ள 18, 19, 38, 39 வார்டு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் மகளிர் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேட்டவலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

கழக அமைப்பு செயலாளரும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், தெற்கு மாவட்ட மண்டல தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ப.மோகன், கழக அமைப்பு செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எம்.இராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினர். முன்னதாக மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் டிஸ்கோ குணசேகரன் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், மண்டல தேர்தல் பொறுப்பாளருமான ப.மோகன் பேசியதாவது:-

அம்மாவின் வழியில் கட்சியையும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கழக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அம்மாவின் அரசு மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அமைய உறுதி ஏற்போம்.

சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் சென்று கூறி கழகத்திற்கு ஆதரவை பெற இளைஞர்கள், இளம்பெண்கள், பாசறை நிர்வாகிகள், மகளிர் பூத்கமிட்டி நிர்வாகிகள் பாடுபட வேண்டும். 2021 சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியை கழகம் வென்றெடுக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்.

இவ்வறு மண்டல தேர்தல் பொறுப்பாளர் ப.மோகன் பேசினார்.