தற்போதைய செய்திகள்

கழகத்தில் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம் – முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் திட்டவட்டம்

சேலம், டிச. 3-

அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத சசிகலாவை கழகத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் கூறினார்.

கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் சேலத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலாவை ஒருபோதும் கழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம். கழகத்தின் அடிப்படை உறுப்பினராக கூட சசிகலா கிடையாது. அம்மா இருக்கும் போதே சசிகலாவையும், அவருடைய குடும்பத்தினரும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். கழகத்தின் உட்கட்சி தேர்தல் சட்ட திட்ட விதிகளின் படி நடைபெறும்.

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கழகத்தின் இரு கண்களாக இருக்கின்றனர். கழகத்தில் இருந்து அன்வர்ராஜா நீக்கப்பட்டது சரியான முடிவு.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகம் மிகப்பெரிய வெற்றி பெறும். முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளில் ஒன்றில் கூட வெற்றிபெற முடியாது. சாலையில் செல்லும் பலர் கழக கொடியை பயன்படுத்துவது போலத்தான் சசிகலாவும் பயன்படுத்துகிறார்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் கூறினார்.