சிறப்பு செய்திகள்

கழகத்துடன் அ.ம.மு.க. இணைப்பு கிடையாது-முதலமைச்சர் உறுதி

சென்னை,

கழகத்துடன் அ.ம.மு.க. இணைப்பு கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.

தலைமை கழகத்தில் நேற்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

இந்தியாவில் எல்லோரும் கட்சி ஆரம்பிக்க உரிமை உள்ளது. அவர் வேறு ஒரு கட்சியை ஆரம்பித்து விட்டார். (டிடிவி தினகரன்) இது குறித்து என்னிடம் கேள்வி கேட்டால் எப்படி.இந்தியாவில் பல கட்சி உள்ளது. அதில் ஒரு கட்சி

அது. கழகம், அமமுக குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன். இணைப்பு இல்லை. கழகத்திலிருந்து விலகி சென்றவர்கள் மீண்டும் கழகத்திற்கு இணைய விருப்பம் தெரிவித்தால் தலைமை கழகம் முடிவு செய்யும். அங்கிருக்கும் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மட்டும் இது பொருந்தும். ஏற்னகனவே நானும் துணை

முதலமைச்சரும் இது குறித்து தெளிவாக ஊடகத்தில் தெரிவித்துள்ளோம். ஏற்கனவே பலர் அங்கிருந்து விலகி கழகத்தில் இணைந்து விட்டார்கள். இன்னும் பலபேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தலைமை இதனை முடிவு செய்யும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.