தற்போதைய செய்திகள்

கழகத்தை யாராலும் வீழ்த்த முடியாது-முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேச்சு

செங்கல்பட்டு

கழகம் ஆலமரம் போன்று வளர்ந்து கொண்டே இருக்குமே தவிர அதை யாராலும் வீழ்த்த முடியாது என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசினார்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
கழகம் சாதாரண இயக்கம் அல்ல. புரட்சித்தலைவரால் தொடங்கப்பட்டு இதயதெய்வம் அம்மாவால் வளர்க்கப்பட்ட இயக்கம். கழகம் ஆலமரம் போன்று வளர்ந்து கொண்டே இருக்குமே தவிர யாராலும் வீழ்த்த முடியாது.

நடைபெறவுள்ள உள்ளாட்சித்தேர்தலில் நமது பலத்தை நிரூபிக்க வேண்டும்.மக்களிடம் செல்வாக்கு பெற்றவராக, திறம்பட செயல்படக்கூடியவராக உங்களுக்குள் ஒருவரை கலந்தாலோசித்து தேர்ந்தெடுங்கள். உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் மிகப்பெரிய வெற்றியை இப்போதே உறுதி செய்வோம். கடுமையாக உழைப்போம். வென்று முடிப்போம்.

இவ்வாறு கழக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி பேசினார்.