தற்போதைய செய்திகள்

கழகம் ஹாட்ரிக் சாதனை படைக்க தமிழ்நாடு முழுவதும் தீவிர பரப்புரை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா பேரவை தீர்மானம்

மதுரை

மதுரை மாநகர், புறநகர் மேற்கு, புறநகர் கிழக்கு மாவட்டங்களின் கழக அம்மா பேரவை சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கத்தில் நடைபெற்றது. இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமை கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புரட்சித்தலைவி அம்மாவின் அருளாசியுடன் இந்திய திருநாட்டிற்கே எடுத்துக்காட்டாக திகழும் வண்ணம் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு 2 கோடியே 1 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,000 நிவாரண உதவி, அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கடந்த 5 மாதங்களாக விலையில்லாமல் வழங்கியும், 36 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,000 நிவாரண உதவி வழங்கியும், 13 லட்சத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,000 நிவாரண உதவி வழங்கியும்,

தன் உயிரைப்பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு மாவட்டந்தோறும் நோய் தடுப்பு ஆலோனைகளை வழங்கி இதன்மூலம் 93 சதவீதத்திற்கு மேற்பட்டோரை குணமடைய செய்துள்ளதை பாராட்டும் விதமாக, பிரதமர் 7 மாநில முதலமைச்சரிடம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது. மேலும் நோய் அறிகுறிகள் கொரோனா தொடர்புகளை கண்டறிவதில் பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் தமிழகம் பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தமிழக அரசின் பல நடவடிக்கைகளால் தமிழகத்தின் இறப்பு சதவீதம் மேலும் குறையும் என முழு நம்பிக்கை உள்ளது. மத்திய அரசின் “ஆயுஸ் சஞ்சீவினி “ டெலிமெடிசன் தமிழக அரசு சிறப்பாக பயன்படுத்தி தொலை மருத்துவத்துறையில் முன்னிலை வகிக்கின்றது. தமிழகத்தின் அனுபவம் நாட்டிற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்நிகழ்வு நாட்டின் பிற மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக திகழும் என்று நம்பிக்கை உள்ளது என்று இதன் மூலம் கூறியுள்ளார்.

தமிழகத்தின் சாமானிய முதல்வராய் சரித்திர சாதனைகளை படைத்திருக்கின்ற முதலமைச்சரை பிரதமர் வாழ்த்தி பாரட்டியிருப்பது இந்திய திருநாட்டிற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்து முதலமைச்சர்களுக்கெல்லாம் முதன்மை முதலமைச்சராக பணியாற்றி சாதனைபடைத்து, ஒட்டு மொத்த தமிழினத்திற்கு பெருமையை தேடித்தந்த முதலமைச்சரின் சாதனைகளை எடுத்து கூறுவது மட்டுமல்லாது,

அம்மாவின் வழியில் தமிழகத்திற்கு இதுபோன்று அழியா புகழை பெற்றுத்தந்த சரித்திரம் போற்றும் சாமானிய முதல்வர் எடப்பாடியாரையும், அவருக்கு உறுதுணையாக திகழும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் கழக அம்மா பேரவை பொற்பாதம் பணிந்து வணங்கி கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்வதோடு, 8 மாதங்களில் 8 கோடி மக்களிடத்தில் அம்மா அரசின் சாதனைத்திட்டங்களை எடுத்துச்செல்வோம். 2021 தேர்தலில் கழகத்திற்கு ஹாட்ரிக் சாதனை வெற்றிகளை பெற்றுத்தந்திட கழக அம்மா பேரவை சூளுரை ஏற்கிறது.

நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் நலனே தன் நலம் என்று ஒட்டு மொத்த விவசாயிகளின் பாதுகாவலராக திகழ்ந்து வரும் குடிமராமத்து நாயகன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களை முழுமையாக தீர்க்க தரிசனத்துடன் ஆராய்ந்து இதன்மூலம் விவசாயப்பொருட்கள் விலை வீழ்ச்சியின் போதும் விவசாயிகளை காத்திட முடியும் என்றும், மேலும் விலை உயர்கின்ற பொழுது குறிப்பிட்டதற்கு மேல் விலையேறினால், அந்த லாபத்தில் பங்கு கிடைக்கும் என்றும், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நெல், கோதுமை போன்ற விளை பொருட்களுக்கு சந்தை கட்டணம், உள்ளாட்சி மேம்பாட்டு வரி, இடைதரகர் கட்டணம், என 8.5 சதவீதம் வரி வசூல் செய்யப்படுகிறது.

இந்த மசோதா மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விவசாயிகளுக்கு கூடுதலாக விலை கிடைக்கும் என்பதை புள்ளி விவரத்துடன் விவசாயிகளுக்கு எடுத்துரைத்து தானும் ஒரு விவசாயி தான் என்பதை மீண்டும் நிரூபித்து 29 மாநிலங்களில் உள்ள விவசாய மக்களின் பாராட்டை பெற்ற “குடிமராமத்து நாயகன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியையும், இதற்கு உறுதுணையாக திகழும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் கழக அம்மா பேரவை பொற்பாதம் பணிந்து வணங்கி முதலமைச்சரின் தீர்க்க தரிசன விளக்கத்தை ஒவ்வொரு விவசாயிகளிடத்தில் எடுத்து சென்றிட கழக அம்மா பேரவை சூளுரை ஏற்கிறது.

கொரோனா தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணியில் தீர்க்க தரிசனமாக உலக நாடுகளுக்கு வழி காட்டும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து தொடர்ந்து காணொளி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தி முதலமைச்சர் எடுத்து வரும் தீர்க்க தரிசன நடவடிக்கைகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கி இந்தியாவிற்கே முன்மாதிரி முதல்வர் என்ற வரலாற்று சாதனைமிக்க பராட்டுதலை வழங்கி தாய் மண்ணை கவுரவித்த பிரதமரை, அமெரிக்கா நாட்டில் நியூயார்க் நகரை தலையிடமாகக்கொண்டு செயல்பட்டு வரும் டைம்ஸ் இதழ் ஆண்டு தோறும் உலகில் 100 செல்வாக்கு மிக்க தலைவர்களின் பட்டியலில் இந்திய திருநாட்டின் சார்பாக இந்த ஆண்டு இடம் பிடித்து பிரதமர் இந்திய தேசத்திற்கே பெருமை தேடித்தந்து உலக அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதற்காக பிரதமருக்கு, முதலமைச்சர், துணை முதலைமச்சர் ஆகியோர் சார்பில் “கழக அம்மா பேரவை” சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

கொரோனா நோய்த்தொற்று நோயாளிகளுக்கு “அம்மா கிச்சன் “ மூலம் தினந்தோறும் கடந்த 82 நாட்களுக்கு மேலாக கழக அம்மா பேரவைன் சார்பில் 5 வேளையும் உணவே மருந்தாக வழங்கப்பட்டு வரும் இந்த புனித பணிக்கு மணிமகுடம் சூட்டும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி “அம்மா கிச்சன்” அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிறது.

இந்த சோதனையான நேரத்தில் கழக அரசுக்கு துணை நிற்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் பாதிக்கப்பட்டவர் களுக்கு நல்ல உணவைக்கொடுத்து அதன்மூலம் நோயினால் பாதிக்கபட்டவர்கள் குணம் அடைந்து வருகின்றனர். இந்த திட்டம் ஒரு முன்னோடியாக இருந்து கழகத்திற்கு நற்சான்றாக திகழ்ந்து வருகிறது என்று கழக அம்மா பேரவையின் செயல்திட்டங்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளிக்கும் வகையில் வரலாற்று பாரட்டுதல்களை அளித்த தமிழக மக்களின் பாதுகாவலர் முதலமைச்சர் எடப்பாடியாருக்கும், அதற்கு உறுதுணையாக திகழும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், கழக அம்மா பேரவை சார்பில் கோடானு கோடி நன்றியை தெரிவிப்பதோடு தொடர்ந்து இந்த புனித பணியை மேற்கொள்வோம் என்று சூளுரை ஏற்கிறது.

அம்மாவின் வழியில் தமிழகத்தில் நீர் மேலாண்மையில் புரட்சியை செய்திடும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஏரி, கண்மாய் ஆகியவற்றை குடிமராமத்து செய்து தமிழகத்தின் நீர் ஆதாரத்தை இரு மடங்காக உயர்த்தி விவசாய மக்களுக்கு நண்பனாக திகழும் முதலமைச்சரின் இந்த திட்டப்பணியில் கழக அம்மா பேரவைத்தொண்டர்கள் விவசாயிகளையும் இணைத்து குடிமராமத்து திட்ட பணிகளில் பங்கேற்று அர்ப்பணிப்போம்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க கழக அம்மா பேரவை உறுப்பினர் சேர்க்கையில் தமிழகம் முழுவதும் 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்த்து கழகத்திற்கு 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை கொண்ட மாபெரும் எஃகு கோட்டை கொண்ட இயக்கமாக உருவாக்கும் புனித பணியை மேற்கொள்வோம்.

8 கோடி மக்களிடத்தில் எட்டுதிக்கும் போற்றும் 100 ஆண்டு பேசும் அம்மா அரசின் வரலாற்று சாதனைகளை பரப்புரை செய்து வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் கழகம் ஹாட்ரிக் சாதனை படைக்கும் வகையில் வெற்றி வரலாறு படைத்திட களப்பணியாற்றுவோம் என்று சபதம் ஏற்போம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.