சிறப்பு செய்திகள்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு-பல்லாயிரக்கணக்கில் கழக தொண்டர்கள் திரண்டனர்

திருப்பூர்,

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பல்லடம், தாராபுரம், கோவை வழியாக ஒட்டன்சத்திரம் சென்ற கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வருகை தந்தார்.

அப்போது அவருக்கு திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை. கே.ராதாகிருஷ்ணன் தலைமையில், முன்னாள் அமைச்சரும், பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் பல்லடம் பேருந்து நிலையம் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உற்சாகம் அடைந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து கோஷங்கள் எழுப்பியும் வரவேற்றனர். அப்போது தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி உடனிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில், கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்.பியுமான சிவசாமி, பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கரைப்புதூர் நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், ஆவின் சேர்மன் மனோகர், மாவட்ட அவைத்தலைவர் சிவாசலம், ஒன்றிய செயலாளர்கள் சித்துராஜ், யூ.எஸ்.பழனிசாமி, சிவப்பிரகாஷ் மற்றும் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, ஹக்கீம், வக்கீல் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணி, மகளிரணி செயலாளர் சித்ரா உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு பேரெழுச்சியுடன் எடப்பாடியாரை வரவேற்றனர்.