கழக செயற்குழு, பொதுக்குழுவிற்கான இறுதி கட்டப்பணி-முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆய்வு

அம்பத்தூர்
கழக செயற்குழு பொதுக்குழு நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் இறுதி கட்டப் பணிகளை முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
வருகின்ற 11-ம்தேதி கழக கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் மண்டபம் எதிரே உள்ள திறந்தவெளியில் பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள், சாரம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் உருவம் பதித்த பேனர்கள் வைக்கும் பணிகள் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் மேற்பார்வையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட கழக செயலாளர்களுமான நத்தம் இரா.விசுவநாதன், பி.தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட கழக செயலாளர்களுமான மாதவரம் வி.மூர்த்தி, பி.வி.ரமணா, வி.சோமசுந்தரம், எஸ்.அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர்கள் சிறுணியம் பி.பலராமன், வி.அலெக்சாண்டர், விருகை ரவி, நா.பாலகங்கா, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, வி.வி.ராஜன் செல்லப்பா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.குப்பன், வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சி பன்னீர்செல்வம், மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.