செங்கல்பட்டு

கழக பொன்விழாவை சிறப்பாக கொண்டாட கலைப்பிரிவு முடிவு

செங்கல்பட்டு

கழக பொன்விழாவை சிறப்பாக கொண்டாட செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கலைப்பிரிவு நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கலைப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருக்கழுக்குன்றத்தில் மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் எ.சி.ரவி பாபு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், மாவட்ட கலை பிரிவு துணை செயலாளர் ஏழுமலை, வழக்கறிஞர் அகோரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட கலைப் பிரிவு துணைத்தலைவர் சி.தரணிதாஸ் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கழகத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் செயல்பட்ட அம்மா அரசின் சாதனைகளை கிராமிய கலைஞர்கள் மூலம் பொது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

நலிந்த அனைத்து கலைஞர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலன் காக்கும் வகையில் அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம் மற்றும் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட கலைப் பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கலைப்பிரிவு பொருளாளர் தீனதயாளன் நன்றி கூறினார்.