சிறப்பு செய்திகள்

கழக வளர்ச்சிபணி, தேர்தல் பணிகள்: ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை

சென்னை

கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கழக ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நவம்பர் 20-ந்தேதி நடைபெறும் என்று கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் நேற்று மாலை மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.