தற்போதைய செய்திகள்

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு வரும் 24-ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2020-2021 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு (பிவிஎஸ்ஸி, ஏஎச் மற்றும் பிடெக்) 24ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைக்கான செய்திக்குறிப்பை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைேவந்தர் சி.பாலச்சந்திரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.

2020-2021-ம் கல்வியாண்டிற்கான (கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSc&AH), உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech-FoodTechnology), கோழியினத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech–Poultry Technology), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech – Dairy Technology) ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளின் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து 24.08.2020 காலை 10.00 மணி முதல் 28.09.2020 மாலை 06.00 மணி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் (Online application வரவேற்கப்படுகின்றன.

அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டின் Foreign National) மாணவர்கள், 24.08.2020 காலை 10.00 மணி முதல் 23.10.2020 மாலை 06.00 மணி வரை இணையதளம் மூலமாக (www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in) விண்ணப்பங்களை (Online application) சமர்ப்பிக்கலாம். இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். பிற வடிவ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகவல் தொகுப்பேடு, சேர்க்கைத் தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்களை (www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in) என்ற பல்கலைக்கழக இணையதளங்களில் காணலாம்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.பாலச்சந்திரன் ஆகியோர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.