தற்போதைய செய்திகள்

குடும்ப அரசியல் நடத்தும் தி.மு.க.வுக்கு முடிவு கட்டுவோம்-அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசம்

தருமபுரி

குடும்ப அரசியல் நடத்தும் தி.மு.க.வுக்கு முடிவு கட்டுவோம் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் மாற்றுக்கட்சிகளிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் விலகி கழகத்தில் இணைந்தனர் .

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்திற்குக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

கடந்த இருபது ஆண்டு காலமாக இந்தப் பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பு தந்தீர்கள். அதனால் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்று பல நல்ல திட்டங்களை இந்த தொகுதியில் செய்திருக்கிறேன்.

தமிழகம் முழுவதும் கழகத்தில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி ஆயிரக்கணக்கானோர் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏன் இணைகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தை கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

இன்று இந்தியாவில் ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்த ஒரு விவசாயி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இந்தியாவிலேயே நீர் மேலாண்மை திட்டத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்ற அந்தஸ்தை வழங்கியிருக்கிறார்கள். அதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆட்சி எந்த வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

விவசாய பெருமக்கள் அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் இருப்பது நீர் மேலாண்மை திட்டம். நீர் மேலாண்மை திட்டத்திற்காக இந்தியாவே பாராட்டி நமது தமிழகத்திற்கு முதலிடத்தை அறிவித்து தமிழக முதல்வரை பாராட்டி இருக்கிறார்களென்றால் அவர் முழுமையாக விவசாயத்தைப் பற்றியும், தமிழக மக்களைப் பற்றியும் தமிழக கிராம வளர்ச்சியைப் பற்றியும் சிந்தித்து செயல்படுகிறார் என்பதற்கு இது மிகப்பெரிய ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

பெட்டமுகிலாம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர அம்மா அவர்கள் நடவடிக்கை எடுத்தார். இப்பகுதியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கழக அரசு தீவிரமாக நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. குமார்செட்டி ஏரியை சீர்செய்ய ரூபாய் 3 கோடியில் டெண்டர் விடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மை திட்டத்திற்காக இன்று அணையாளம் அணைக்கட்டிலிருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு முதலமைச்சர் நிலம் கையகப்படுத்த ஓராண்டுக்கு முன்பாகவே நிதியை ஒதுக்கி விட்டார்.

ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மக்கள் அந்த நிலத்தை கையகப்படுத்த ஒத்துழைப்பு தர மறுத்தார்கள். அதனால் இன்றைக்கு சட்டத்தை மாற்றி நிலத்தை கையகப்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அந்த திட்டம் தொடங்கி அடிக்கல் நாட்டப்பட்டது. அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழக முதலமைச்சர் மக்களிடம் எளிமையான முறையில் நேரடியாகச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்யும் வகையில் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் அனைவரும் முதலமைச்சரை பெருமையாக கருதி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் தமிழக முதலமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார் என்று பாராட்டப்பட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து இன்று கழகத்தில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

அம்மா அவர்களின் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் தற்பொழுது கழக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் கழக ஆட்சி மீது பொய்யான பிரச்சாரங்களை செய்து வருகிறார். அவரை சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய செய்ய வேண்டும்.

மக்களுக்கு எந்த திட்டத்தையும் செய்யாத ஒரு கட்சி திமுக மட்டும் தான். குடும்ப அரசியல் நடத்தி வருகிறது திமுக. தருமபுரி மாவட்டத்தில் எவ்வித நல்ல திட்டத்தையும் செய்யாத திமுக மக்களிடம் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகிறார்கள். அவர்களை இந்த தேர்தலில் துரத்தி அடிக்க வேண்டும்.

2021 பொதுத்தேர்தல் வரும் பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக யார் போட்டியிடு கின்றார்களோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை தந்து இன்றைய முதலமைச்சராக இருக்க கூடியவர் துணை முதலமைச்சராக கூடியவர்கள் மீண்டும் வருவதற்கும் ,உறுதுணையாக இருக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் அனைத்து நலத்திட்ட உதவிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ,காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம்,

மகளிர் காவல் நிலையம் வணிகவரி அலுவலகம், சட்டகல்லூரி உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள், கல்லூரிகள் கழக அரசு ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது. இன்றைய மாணவர் சமுதாயம், தமிழகம் முழுவதும் முதலமைச்சருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்ற மாநிலங்களில் எல்லாம் இல்லாத திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமது தமிழ்நாட்டு மக்களுக்காக வழங்கினார். இந்தியாவே திரும்பிப்பார்க்கின்ற வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக அதிகபடியான மாணவர்களை உயர் கல்வியில் சேர்த்து படிக்கவைக்கின்ற மாநிலம் நமது தமிழகம் தான்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளா் செல்வராஜ், கிழக்கு ஒன்றிய கழக செயலாளா் செந்தில்குமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் ரவிசங்கர், பாலக்கோடு தெற்கு ஒன்றிய கழக செயலாளா் கோபால் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் செந்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் காவேரி, ஒன்றிய கழக துணை செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவிந்தசாமி, இணை செயலாளர் சாந்தகுமார் சுந்தரபாண்டியன் உள்பட பலர் கொண்டனர்.