கடலூர்

குறியாமங்கலம் ஊராட்சியில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் – கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கடலூர்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் குறியாமங்கலம் ஊராட்சியில் கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவி.ராசாங்கம் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் க.திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் மதியழகன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். மேலும் குறியாமங்கலம் ஊராட்சியில் 2 பூத்களுக்கு நிர்வாகிகளை நியமித்தும் ஆலோசனை வழங்கினார்.

விழாவில் குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வீராசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாஸ்கர், சுதாகர், பாவாடை, இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சமயசங்கரி மோகன், ராஜேஸ்வரி ரெங்கசாமி, மரகதம், இளைஞரணி செயலாளர் செழியன், நிர்வாகிகள் மாரிமுத்து, கணேஷ், சிவக்குமார், கல்யாணம், கோதண்டம், சவுந்தர், ராமச்சந்திரன், ஐ.டி. வசந்த் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.