தற்போதைய செய்திகள்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 45 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு கிகிச்சை -அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

சென்னை

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 45 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு, முதலமைச்சரின் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிடிநநாடு முழுவதும் சிறப்பான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று காலத்திலும் அரசு மருத்துவமனைகளில் இதர மருத்துவ சேவைகள் பாதிக்கப்படகூடாது என்ற கருத்தை முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 542 குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர்.மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 372 குழந்தைகளும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களுடன் அனுமதிக்கப்பட்ட 30 குழந்தைகளும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்களின் தொடர் சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளனர்.

சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய 455 குழந்தைகள், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 25 குழந்தைகள், ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகள், பிறவி இருதய குறைபாட்டுடன் கூடிய 3 குழந்தைகள், சிறுநீரக கோளாரால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகள், நிமோனியா பாதித்த 8 குழந்தைகள், பிறவி குறைபாடுடன் கூடிய 5 குழந்தைகள், குடல்வால் உள்ளிட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 குழந்தைகள் மற்றும் தீவிர தொற்றுடன் பாதிக்கப்பட்ட 10 பச்சிளம் குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு மொத்தம் 944 குழந்தைகளுக்கு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இதனைத் தவிர தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 45,222 குழந்தகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

முதலமைச்சரின் மக்கள் நலன் காக்கும் பணிகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் தமிழக அரசின் தொடீநுவில்லா செயல்பாடுகள் அனைவரின் கவனத்தையும் தொடர் பாராட்டினையும் பெற்றுவருகிறது.

இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.