தற்போதைய செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அனைவரும் வீடு திரும்பினர்- அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்

ஈரோடு

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டத்தில் மேற்கொண்ட கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் மூலம் கொரோனா வைரஸ் நோய் தொற்று சிகிச்சை பெற்று வந்த அனைவரும் நலமுடன் அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெருந்துறை, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்த 4 அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பழங்கள் மற்றும் பூங்கொத்து கொடுத்து அனுப்பி வைத்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆணைக்கிணங்க, கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதில், பெருந்துறை, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக சிகிச்சை பெற்று தற்பொழுது கொரோனா வைரஸ் நோய் தொற்று ஆய்வில் வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு குணமடைந்த 4 நபர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்.சி.கதிரவன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம் (பெருந்துறை) ,கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு),கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி),.இ.எம்.ஆர்.ராஜா (எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்),சு.ஈஸ்வரன் (பவானிசாகர்) ஆகியோர் முன்னிலையில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் நலமுடன் அவர்களது இல்லத்திற்கு பழங்கள் மற்றும் பூங்கொத்து கொடுத்து அனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டத்தில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்று திரும்பிய நபர்கள் கண்டறியப்பட்டு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஆய்வில் இரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 2 நபர்கள்,

ஈரோடு மாநகராட்சியைச் சேர்ந்த 53 நபர்கள், நம்பியூர் வட்டம், அழகாபுரிநகர் பேரூராட்சியில் 2 நபர்கள், சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் கே.என்.பாளையம் பேரூராட்சியில் 3 நபர்கள், கோபிசெட்டிபாளையம் நகராட்சி மற்றும் இலக்கம்பட்டி பேரூராட்சியில் 2 நபர்களும், பெருந்துறை வட்டம், கருமாண்டிசெல்லிபாளையத்தில் 2 நபர்களும்,

பவானி வட்டம், கவுந்தபாடி ஊராட்சியில் 1 நபரும் மற்றவர்கள் இரயில்வே காலனி குடும்பத்தினர் மற்றும் துபாய் சென்று திரும்பியவர்கள் என மொத்தம் 70 நபர்கள் பல்வேறு கட்டங்களில் 64 நபர்கள் பெருந்துறை, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 நபர்கள் கோயமுத்தூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும், ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் ஆகிய இடங்களில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிறப்பான சிகிச்சை பெற்று வந்தனர்.

ஈரோடு மாநகராட்சி பகுதிகளான கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை, மீராமொய்தீன் வீதி, மோசிகீரனார் வீதி, இரயில்வே காலனி, பி.பெ.அக்ரஹாரம், மாணிக்கம்பாளையம், மரப்பாலம், சாஸ்திரி நகர், கருங்கல்பாளையம், கள்ளுக்கடைமேடு ஆகிய இடங்களிலும், நம்பியூர் வட்டம், அழகாபுரிநகர் பேரூராட்சி, கொடுமுடி வட்டம், சென்னசமுத்திரம் மற்றும் கொம்பனை புதூர், பவானி வட்டத்தில் கவுந்தபாடி ஊராட்சி,

கோபிசெட்டிபாளையம் நகராட்சி மற்றும் லக்கம்பட்டி பேரூராட்சி, சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் கே.என்.பாளையம் பேரூராட்சி, பெருந்துறை வட்டம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி ஆகிய ஊரகப் பகுதிகள் என மொத்தம் 18 இடங்களில் 32,435 குடும்பங்களைச் சார்ந்த 1,20,135 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரத்த பரிசோதனை ஆய்வில் நாளது வரை 3250 நபர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் 513 நபர்களின் இரத்த மாதிரிகள் ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆணைக்கிணங்க,

மேற்கொள்ளப்பட்ட தீவிர போர்க்கால நடவடிக்கை மற்றும் சிகிச்சையின் அடிப்படையில் முதற்கட்டமாக 15.04.2020 அன்று 13 நபர்களும் மற்றும் 2-ம் கட்டமாக 17.04.2020 அன்று 9 நபர்களும், 3-ம் கட்டமாக 20.04.2020 அன்று 10 நபர்களும் மற்றும் 4-ம் கட்டமாக 22.04.2020 அன்று 28 நபர்களும் என 60 நபர்கள் சிகிச்சை முடிவடைந்து நலமுடன் அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் (28.04.2020) 5-ம் கட்டமாக கொரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறி காரணமாக சிகிச்சை பெற்று வந்த 4 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஆய்வில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு, நலமுடன் அவர்களது இல்லத்திற்கு மருந்துகள், பழங்கள் மற்றும் மலர்கள் ஆகியவற்றை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்து இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும் நபர்கள் தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவ குழுக்கள் மூலம் வீட்டு கண்காணிப்பில் இருப்பார்கள்.

மேலும் ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் தொடர்;ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் தூய்மை பணிகள் தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவ அவசர நிலைக்காலத்தில் மனிதநேயத்தோடு பணியாற்றி நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கும், மாநகராட்சி ஆணையாளருக்கும், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநருக்கும் மேலும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தன்னலம் பாராமல் உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாகவும், செய்திகளையும் உடனுக்குடன் மக்களிடம் உண்மைத் தன்மையுடன் நேர்மறையாக கொண்டு சேர்த்த தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களைச் சேர்ந்த ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே பொதுமக்கள் இனிவரும் காலங்களில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், எஸ்.சக்திகணேசன்., ஒன்றிய செயலாளர் விஜயன் (எ) ராமசாமி, யூனியன் சேர்மன் சாந்தி, டி.டி.ஜெகதீஸ், பெருந்துறை சங்கர், துரைராஜ், ஏ.வி.பாலகிருஷ்ணன், பி.சுப்பிரமணியம், மொடக்குறிச்சி யூனியன் சேர்மன் கணபதி, துணைத் தலைவர் மயில் சுப்பிரமணி, ரஞ்சித் குமார், டைலர் ரவி மாநகராட்சி ஆணையாளர் மா.இளங்கோவன், ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் இரா.மணி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், துணை இயக்குநர் (சுகாதாரம்) சவுண்டம்மாள், மாநகர நல அலுவலர் முரளிசங்கர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.