தற்போதைய செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து பூரண நலம் : வேலூரில் 5 பேர் வீடு திரும்பினர்

வேலூர்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் தொடர் கண்காணிப்பில் இருந்த கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டம் என சிகிச்சையளித்ததில் நெகட்டிவ் என பூர்ண குணமடைந்த நபர்களான வேலூரைச் சேர்ந்த 4 பேர், திருப்பத்தூரை சேர்ந்த ஒருவர் என 5 பேரை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முகசுந்தரம் கரவொலி எழுப்பி 108 ஆம்புலன்ஸ் மூலம்வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் செல்வி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மணிவண்ணன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.