தற்போதைய செய்திகள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை – தலைமைச் செயலகத்தில் உணவங்களுக்கு விடுமுறை

சென்னை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவக்கை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் உணவங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

மேலும், சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தலைமை செயலகத்திலுள்ள உணவகங்கள் அனைத்திற்கும் ஐந்து நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.