தற்போதைய செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ பெருமிதம்

சென்னை

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் என்று வி.என்.ரவி எம்.எல்.ஏ பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏழை குடும்பங்களுக்கு தினந்தோறும் எண்ணற்ற உதவிகளை தென்சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் தொகுதியில் தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட சாலிகிராமத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 127- வது வார்டுக்குட்பட்ட உள்ள குலசேகரபுரம், சின்மையா நகர், சேமாத்தம்மன் நகர், வேதாநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3500க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் 5 கிலோ அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, கோதுமை மாவு, உப்பு, கடுகு, சீரகம், மிளகாய் பொடி, ரவை, பிஸ்கட் பாக்கெட், கபசுர குடிநீர் பாக்கெட், 5 வகையான காய்கறிகள் ஆகியவை அடங்கிய தொகுப்புகளை தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி வழங்கினார்.

மேலும் அவர் மக்களிடம் பேசுகையில், கொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் லட்சகணக்கானோர் இறந்து வரும் சூழலில் அம்மாவின் நல்லாசியுடன் நல்லாட்சி புரியும் முதலமைச்சர் எடுத்த போர்க்கால நடவடிக்கையால் இறப்பு சதவீதம் மிகவும் குறைவாகவும், நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் அதிகம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நோய் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகம். அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. முதலமைச்சரின் அறிவுத்தலின்படி மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு நோய் தொற்று தடுப்பு பணிகளை துரிதபடுத்தி வருகிறோம்.

இந்த நோயை பற்றி யாரும் கவலைபட வேண்டாம். தனித்திரு விலகி இரு வீட்டில் இரு என்ற முதலமைச்சரின் அறிவுரையை நீங்கள் பின்பற்றினால் போதும் உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் முதியோர்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் கைகளை அவ்வப்பொழுது சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்ய வேண்டும், முகத்தை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும், பொது இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியில் வரக்கூடாது என்று அனைவருக்கும் அறிவுரை வழங்கி விளிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஏ.எம்.காமராஜ், வட்ட செயலாளர் காரத்தே மகேஷ், எஸ்.பி.குமார், பில்டர் மோகன், ஸ்ரீதர், வினோத், கண்ணன், இ.சங்கர், டி.ரமேஷ், வே.செல்வம், காணுநகர் தினேஷ், டி.சி.அசோக்குமார், கோகுல், ஏ.கே.சீனிவாசன், ரா.தியாகராஜன், எல்.அல்லிமுத்து, ஆதவன். சங்கர், முரளி மற்றும் கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.