திருவண்ணாமலை

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை – திருவண்ணாமலையில் காணொளி மூலம் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரால் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பராவமல் இருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமியால் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுக்கூட்டத்தின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, துணை ஆட்சியர் (பயிற்சி) அமீத்குமார், தனித்துணை ஆட்சியர் மந்தாகினி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) டாக்டர் அரவிந்த், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் கண்ணகி, மருத்துவ கல்லூரி குடிமை பணி மருத்துவர் டாக்டர் சகில்அகமது, செய்யார் மருத்துவ பணிகள் சுகாதார துணை இயக்குநர் டாக்டர் அஜிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள காணொளி அமைப்புகளின் வாயிலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களை தங்க வைக்கும் மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், மாவட்டத்தில் பரிசோதனைகளை அதிகப்படுத்தல் மற்றும் முடிவுகளை விரைந்து பெறுதல், நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் செய்ய வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,

மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் அறிகுறியுடன் வருபவர்களை உடனடியாக தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அழைத்து செல்லுதல், அவர்களின் தொடர்பில் இருந்தவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்தல், நோய் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைத்துள்ள இடங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரால் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிவுரைகள் அளிக்கப்பட்டது.