சிறப்பு செய்திகள்

சிறந்த அறிவுசார் தலைமுறையை உருவாக்கிடும் ஆசிரிய பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

சென்னை,

மாணவ செல்வங்களின் வளர்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து, சிறந்த அறிவுசார் தலைமுறையை உருவாக்கிடும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஆசிரியர் தினம் நல்வாழ்த்துகள் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

மாணவ செல்வங்களுக்கு கல்வியுடன், நற்குணம், ஒழுக்கம், சமத்துவம் கற்பித்து, அவர்களின் வளர்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து, சிறந்த அறிவுசார் தலைமுறையை உருவாக்கிடும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஆசிரியர் தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல மாணவர்களை உருவாக்கி, அறிவுசார் உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.