தற்போதைய செய்திகள்

சிறுவாபுரி முருகன் கோயில் அர்ச்சகர்களுக்கு நிவாரணம் – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ வழங்கினார்

திருவள்ளூர்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், கழகம் சார்பில் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் கோவிலில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண தொகுப்பினை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் வழங்கினார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து கோவில்களும் மூடப்பட்டது. இதனால் அர்ச்சகர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் சிறுவாபுரி முருகன் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் சோழவரம் ஒன்றியம் பகுதிகளில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண தொகுப்பாக தலா 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் மளிகை பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புடன், சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.2000 ஆகியவற்றை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் வழங்கினார். அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கிச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் கார்மேகம், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ், மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் நடராஜன், மாவட்ட விவசாய அணி பிரிவு பொருளாளர் ரவிச்சந்திரன், பஞ்சட்டி ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், சிறுவாபுரி ஆனந்த குருக்கள், பஞ்செட்டி மோகன் குருக்கள், ஆண்டார்குப்பம் சுந்தர குருக்கள், சங்கர் குருக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.