தற்போதைய செய்திகள்

சிவகாசியில் ஆவின் பால் விற்பனை நிலையம் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

விருதுநகர்

சிவகாசி-திருத்தங்கல் சாலையில் ஆவின் பால் விற்பனை நிலையத்தை விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட பால்வளத்துறை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி விருதுநகர், திருவில்லிபுத்தூர், சிவகாசி. சாத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பூத் திறக்கப்பட்டு வருகின்றது. சிவகாசியில் அண்ணா காய்கறி மார்க்கெட், சிவகாசி கார் ஸ்டாண்ட், மாரியம்மன் கோவில் அருகில், பஸ் ஸ்டாண்ட், ரிசர்வ் லயன், பாறைபட்டி, ஆனையூர், அனுப்பன்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆவின் பூத் திறக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் சிவகாசி-திருத்தங்கல் சாலையில் ஜா போஸ் திருமண மணடபம் எதிரில் புதிய ஆவின் விற்பனை நிலையத்தை விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து ஆவின் பால் விற்பனையை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, நகர செயலாளர் அசன்பதூரூதீன், நகர அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், கட்சி நி்ர்வாகிகள் தொகுதி கணேசன், கே.டி.ஆர்.கார்த்திக், சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.