தமிழகம்

சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்

சென்னை

சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக இருந்த டாக்டர் பீலா ராஜேஷ், வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை வருவாய் நிர்வாக ஆணையராக டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.