சிறப்பு செய்திகள்

சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம்,கொரோனா பேரிடரில் இருந்தும் சென்னை விரைவில் மீண்டு வரும் – முதலமைச்சர் டுவிட்டரில் பதிவு

சென்னை

சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கொரோனா பேரிடரில் இருந்தும் சென்னை விரைவில் மீண்டு வரும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது.

வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று. கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.