திருவண்ணாமலை

செய்யாறு அரசு மருத்துவமனையில் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ ஆய்வு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார் அப்போது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கேட்டறிந்தார். மேலும் மருத்துமனையில் உள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

அப்போது மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 40 நபர்களுக்கு கண்ணாடி வழங்கினார். பின்னர் மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

பின்னர் மருத்துவர்களிடம் மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் சம்பந்தமாக அரசு உதவிகள் தேவை எனில் உடனடியாக என்னிடம் தகவல் கூறுங்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது டாக்டர்கள் பாலகிருஷ்ணன், கார்த்திக், மற்றும் கழகத்தினர் எம்.மகேந்திரன், டி.பி.துரை, கே.வெங்கடேசன், பாஸ்கர் ரெட்டியார், அருணகிரி, ரவிச்சந்திரன், கோபால், கோவிந்தராஜ், கந்தசாமி, சுரேஷ் நாராயணன், துரை, சேகர், செபாஸ்டியன் துரை, தனசேகர், பெருமாள், பச்சையப்பன் தணிகாசலம், சுரேஷ், எழில் உள்ளிட்ட பலர் இருந்தனர்.