தமிழகம் தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் வழியில் சமுதாயத்தை சீர்திருத்துவோம் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சூளுரை

சென்னை

ஒடுக்கப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவராக டாக்டர் அம்பேத்கரின் வழியில் சமுதாயத்தை மேலும் சீர்திருத்துவோம் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சூளுரைத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மாபெரும் சிந்தனையாளரும், ‘‘தோன்றின் புகழொடு தோன்றுக’’ என்பதற்கு உதாரணமாய் விளங்கியவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவராய் திகழ்ந்தவருமான சட்டமேதை டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் நினைவு நாளில் அவர் வழியில் சமுதாயத்தை மேலும் சீர்திருத்திட சூளுரைப்போம்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.