தமிழகம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

டாஸ்மாஸ் உழியர்களுக்கு 10 சதவிகிதம் போனஸ் வழங்கபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம், மின்வாரியப் பணியாளர்கள் உள்பட அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் 10 சதவிகிதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி சி பிரிவினருக்கு 8.33 சதவீதம் மற்றும் டி பிரிவினருக்கு 1.67 சதவீதம் கருணைத்தொகை என 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.