தற்போதைய செய்திகள்

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் – அமைச்சர் இரா.துரைக்கண்ணு உறுதி

திருவாரூர்

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு கூறி உள்ளார்.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மகால் கூட்டரங்கில் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் சார்பில் நேற்று நடைபெற்ற மன்னர் சரபோஜியின் 243-வது பிறந்தநாள் நூல் வெளியிட்டு விழாவில் The Guide Book of T.M.S.S.M.L(Marathi) and The Guide Book of T.M.S.S.M.L(Telugu) vd;w Gjpa என்ற புதிய நூல்களை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு வெளியிட மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து 14 மறுபதிப்பு நூல்களையும் அமைச்சர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்தராவ் முன்னிலை வகித்தார்.

புதிய நூல்களை வெளியிட்டு அமைச்சர் இரா.துரைக்கண்ணு பேசுகையில், உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் சரஸ்வதி மஹால் நூலகத்தில் பல சிறப்பு வாய்ந்த நூல்கள் உள்ளன. மருத்துவ குறிப்புகளை ஓலைச்சுவடி நூல்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தவர் மன்னர் சரபோஜி ஆவார். இரண்டாம் சரபோஜி மன்னர் காசிக்கு சென்றபோது அங்கிருந்து பல நூல்களை சரஸ்வதி மகால் நூலகத்திற்கு பெற்றுக் கொடுத்தார். சரஸ்வதி மஹால் நூலகம் உலகளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கக் கூடியதாகும். இந்நூலகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றார்.

பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பேசுகையில், தஞ்சாவூரை சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் உள்ளிட்ட அரச வம்சத்தினர் ஆண்டுள்ளனர். மராட்டிய மன்னர்கள் தஞ்சாவூரின் வளர்ச்சிக்கு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். அதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு சரஸ்வதி மஹால் நூலகமாகும். சரஸ்வதி மஹால் நூலகம் மருத்துவம், விஞ்ஞானம், மொழி போன்ற பல்வேறு துறைகளின் நூல்களைக் கொண்டுள்ளது.

தஞ்சாவூர் நகரத்தின் கட்டமைப்பை வடிவமைத்தவர்கள் மராட்டிய மன்னர்கள் ஆவர். பல மொழிகளில் உள்ள ஆக்கபூர்வமான நூல்களை சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு கொண்டுவந்து தஞ்சாவூருக்கு பெருமை சேர்த்தவர் மன்னர் சரபோஜி ஆவார். பொது மக்கள் இந்நூலகத்தை பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் சரஸ்வதி மஹால் நூலக நிர்வாக அலுவலர் இராமகிருட்டிணன், சரஸ்வதி மஹால் நூலக ஆயுள் உறுப்பினர் சிவாஜி ராஜா போஸ்லே, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.மோகன், முன்னாள் மாநகர மேயர் சாவித்திரி கோபால், மொத்த கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் ரமேஷ், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.