சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கமேலும் பல நடவடிக்கைகள் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்

சென்னை

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க மேலும் பல நடவடிக்கைகளை அரசு எடுக்கவுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது.

தற்போதுள்ள சூழ்நிலையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள எங்கள் அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உள்ளது. தமிழக மக்களின் வளம் மற்றும் வளர்ச்சி என்ற ஒரே எண்ணத்தில் உள்ள எங்களின் அரசு, தமிழகத்தில் முதலீடுகள் செய்வதற்கும், நிறுவனங்கள் வருவதற்கும் மேலும்பல நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.