தமிழகம்

தமிழகத்தில் வேலையின்மை அரை சதவீதமாக குறைப்பு – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம்

சென்னை

தமிழகத்தில் வேலையின்மை அரை சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அடுக்கடுக்கான தமிழக அரசின் முயற்சிகள், அடுத்தடுத்து மேற்கொள்ளும் முதலீட்டு ஒப்பந்தங்கள், முடுக்கி விடப்பட்ட தொழில்சூழல், செழித்து நிற்கும் விவசாயம் விளைவாக, 5 ஆண்டுகளில் மிக குறைந்த வேலையின்மை
விகிதம் 0.5 சதவீதம் மக்களின் மகிழ்ச்சியோடு வெற்றி நடைபோடும் தமிழகம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.