தற்போதைய செய்திகள்

தருமபுரியில்கழக கூட்டணி வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு

தர்மபுரி,

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கழகம் மற்றும் பா.ம.க. வேட்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி கழக வேட்பாளரும், தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், உயர் கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் கழக வேட்பாளர்கள் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி ஏ.கோவிந்தசாமி, அரூர் வே.சம்பத்குமார், பென்னாகரம் தொகுதியில் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரும், பாமக தலைவருமான ஜி.கே.மணி, தருமபுரி தொகுதி பா.ம.க வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோர் தருமபுரியில் பெரியார், அண்ணா, அம்பேத்கர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவ சிலைக்களுக்கு மாலை அணிவித்தனர். அப்போது கழக மற்றும் பா.ம.க. வேட்பாளர்களுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.