தற்போதைய செய்திகள்

திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் விலகி அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

தருமபுரி

திமுக உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் விலகி அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலகோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பஞ்சபள்ளி அடுத்த ஒட்டர்திண்ணை, ஜலத்திமனூர், சொருக்குரிக்கை, கெங்கபாளையம், செங்காடு, பி.கே.பி.நகர், கரகூர், சின்னாறு அணை உள்ளிட்ட 8 கிராமங்களில் இருந்து திமுக உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் விலகி ஓஎம்ஜி(எ) குண்டன் தலைமையில், தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான கே.பி.அன்பழகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.அரங்கநாதன், ஒன்றிய கழக செயலாளர்கள் கோபால், செந்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா சரவணன், பாலகோடு நகர கழக செயலாளர் சங்கர்,கூட்டுறவு சங்க தலைவர் வீரமணி, ஒன்றிய அவைத்தலைவர் பி.ஜி.வெங்கட்ராமன், ஒன்றிய பொருளாளர் பாண்டுரங்கன், நிர்வாகிகள் பி.டி.சண்முகம், சுந்தரேசன், வெங்கடாசலம், புதூர் சுப்பிரமணி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.