கன்னியாகுமரி தற்போதைய செய்திகள்

தியாகி அ.தமிழ் மகன் உசேனுக்கு புரட்சித்தலைவி அம்மா விருது – நாகர்கோவிலில் என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்

கன்னியாகுமரி

தந்தை பெரியார் விருது பெற்ற தியாகி அ.தமிழ்மகன் உசேனுக்கு நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் புரட்சித்தலைவி அம்மா விருதை வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 2020-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதைஅனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும், ஆட்சிமன்றக்குழு உறுப்பினரும், முன்னாள் வக்பு வாரிய தலைவருமான தியாகி டாக்டர் அ .தமிழ்மகன் உசேனுக்கு வழங்கி கவுரவித்தார். இதையடுத்து அவருக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் சிதம்பரநாத பிள்ளை என்ற தங்கம் வரவேற்று பேசினார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் எஸ் எம் பிள்ளை விழா தொகுப்புரை ஆற்றினார். விழாவிற்கு மாவட்ட ஆவின் பெருந்தலைவரும் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான எஸ்.ஏ.அசோகன் தலைமை வகித்தார் மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு சங்கத் தலைவரும், மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான டி. ஜாண் தங்கம் முன்னிலை வகித்தார்.

விழாவில் தந்தை பெரியார் விருது பெற்ற அ.தமிழ்மகன் உசேனுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் புரட்சித்தலைவி அம்மா விருதினை வழங்கி பாராட்டி பேசினார்.