தற்போதைய செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

மதுரை

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காப்புகட்டி தங்களது சஷ்டி விரதத்தை தொடங்கினர்.முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது.

ஆண்டுதோறும் ஏழு நாட்கள் நடைபெறும். இத்திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.முன்னதாக கோவில் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு கந்தசஷ்டி காப்பு கட்டுதல் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டுப்பட்டது.தொடர்ந்து சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினார்கள்.

முன்னதாக உற்சவர் சன்னதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும், சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி,தெய்வானைக்கு பால்,பன்னீர்,இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகா அர்ச்சனை நடைபெறும்.தினமும் சண்முகர் வெள்ளை, பச்சை, சிவப்பு உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இதேபோல தினமும் மாலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் விடையாத்தி சப்பரத்தில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை ஆறு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 29ஆம் தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 30ஆம் தேதி சூரசம்ஹார லீலை, 31ஆம் தேதி சஷ்டி தேரோட்டமும் நடைபெறும் .விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

கோவிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்கள்: மதுரை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருப்பார்கள்.

இது தவிர கோவில் சுற்றி உள்ள மண்டபங்களிலும் பக்தர்கள் தங்கி விரதம் இருப்பார்கள்.விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தினமும் தினை மாவு, எலுமிச்சம் சாறு, பால் மற்றும் அன்னதானம் வழங்கப்படும்.

மேலும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மின்விளக்கு,கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் ஆங்காங்கே பெரிய அளவிலான டிவிகள் வைக்கப்பட்டு சண்முகா அர்ச்சனை, உற்சவர் சன்னதியில் பூஜைகள் உள்ளிட்ட கோவிலில் நடைபெறும்