மதுரை

திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.38 லட்சத்தில் தரைப்பாலம்- வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பூமிபூஜை

மதுரை

திருநகர் அமைதி சோலை நகர் பாதையில் சேமட்டான் குளம் கண்மாயை கடக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேதமடைந்தது.

இதையடுத்து இந்தப் பாதையின் வழியே செல்லக்கூடிய எஸ்ஆர்வி லயன் சிட்டி ஹார்விபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.விடம் பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து அவரது அறிவுறுத்தலின் பேரில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் ரூ.38 லட்சத்தில் புதிய தரைப்பாலம் அமைக்க உத்தரவிட்டது. அதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது விழாவில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.